ஆந்திராவில் மொபைல் மூலம் புகார்களை பதிவு செய்ய "புதிய மொபைல் செயலி" அறிமுகம்
காவல்துறை சேவைக்காக புதிய மொபைல் செயலியை, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
ஏபி போலீஸ் சேவா என்று பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய முடியும். முதல் தகவல் அறிக்கை, இ-சலான், பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்றவற்றின் தற்போதைய நிலையையும் தெரிந்து கொள்ளலாம்.
சாலை விபத்து நிகழ்ந்தால் அது குறித்து உடனுக்குடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பும் விதத்திலும் இந்த செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
Comments